முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ் புத்தாண்டு.. தொடர் விடுமுறை - சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ் புத்தாண்டு.. தொடர் விடுமுறை - சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிறப்பு பேருந்து

சிறப்பு பேருந்து

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டு ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும், ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், ஏப்ரல் 21-ம் தேதி 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.வி ழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை மற்றும் மதுரைக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

top videos

    விடுமுறைக் காலங்களில் மக்கள் பேருந்து நிலையங்களில் வாகனங்களுக்கு அலைமோதுவதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Special buses, Tamil New Year, Tamil News