முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அனல் கக்கும் அக்னி நட்சத்திரம்... தமிழகத்தில் இன்றும் வெயில் சுட்டெரிக்கும்... வானிலை அலெர்ட்..!

அனல் கக்கும் அக்னி நட்சத்திரம்... தமிழகத்தில் இன்றும் வெயில் சுட்டெரிக்கும்... வானிலை அலெர்ட்..!

வெயில்

வெயில்

18 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக பரவலாக மழை பெய்தது. இதனால் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 18 பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. கிருஷ்ணகிரி, வேலூர் பகுதிகளில் உச்சபட்சமாக, 108 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவானது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி நகரில் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி பகுதிகளில் 105 டிகிரியும், பரங்கிப்பேட்டையில் 104 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாட பணிகளுக்கு செல்வதே கடும் சிரமமாக மாறி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வெயில் கடுமையாக வாட்டி வதைக்கும் நிலையில், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை என்றும் அன்றாட பணிகள் எதும் செய்ய முடியவில்லை என்றும் சென்னை மற்றும் வேலூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், உச்சி வெயில் எனப்படும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் குழந்தைகள், முதியோர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: MET warning, Tamil Nadu, Weather News in Tamil