முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.... ஜப்பானில் மு.க.ஸ்டாலின் பேச்சு

முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.... ஜப்பானில் மு.க.ஸ்டாலின் பேச்சு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ஜப்பான் உதவியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

  • Last Updated :
  • inter, IndiaJapanJapanJapanJapan

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாக ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூரைத் தொடர்ந்து, ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ஜப்பான் உதவியதை குறிப்பிட்டார். நிசான், தோஷிபா, யமஹா, ஹிட்டாச்சி உள்ளிட்ட பல ஜப்பான் பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்தியாவில் முதலீடு செய்ய தமிழ்நாடு தான் சிறந்த மாநிலம் என கூறினார்.

மேலும் மருத்துவம், உணவு, ஜவுளி, காலணி உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான பிரத்யேக பூங்காக்களை உருவாக்கி வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், உற்பத்தி திட்டங்களைத் தவிர, மேம்பாட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஜப்பான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிக்க : குடியரசுத் தலைவர் பதவி தகுதியற்றதாக ஆகிவிட்டதா...? முரசொலி விமர்சனம்..!

மேலும், தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்க ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

top videos

    முன்னதாக, சென்னை அருகே திருப்போரூரில் செயல்படும் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஏர் பேக்குகள் தயாரிக்கும் டைசல் நிறுவனம், 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: CM MK Stalin, Investment, Japan