முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் கோடை வெப்பத்தை தணித்த மழை...!

தமிழகத்தில் கோடை வெப்பத்தை தணித்த மழை...!

மழை

மழை

கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மிதமான மழை பெய்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நேற்று வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்த நிலையில்,மாலை சாரல் மழை பெய்தது. பின்னர் அது கனமழையாக அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது.வடமதுரை, அய்யலூர், தாமரைப்பாடி, பில்லம நாயக்கம்பட்டி, ஜம்புலிம்பட்டி, கம்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி மம்சாபுரம், வன்னியம்பட்டி கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.இதேபோல பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் பழனி பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

top videos

    கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மிதமான மழை பெய்தது. அப்ச‌ர்வேட்ட‌ரி, ஏரிச்சாலை, கீழ்பூமி, மூஞ்சிக்க‌ல், ஆன‌ந்த‌கிரி, அண்ணாசாலை, உகார்த்தேந‌க‌ர், செண்ப‌க‌னூர், பெருமாள்ம‌லை உள்ளிட்ட‌ பகுதிகளில் மழை பெய்தது.சேலம் மாநகர பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    First published:

    Tags: Rain Update, Rain updates, Tamil News, Weather News in Tamil