முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த 5 நாளைக்கு மழை இருக்கு.. குட் நீயூஸ் சொன்ன வானிலை மையம்

அடுத்த 5 நாளைக்கு மழை இருக்கு.. குட் நீயூஸ் சொன்ன வானிலை மையம்

மழை

மழை

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பொருத்தவரை, ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

Also Read : கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு- முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Rain Update, Summer Heat, Weather News in Tamil