முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் மழை வெளுக்கப்போகுது... வானிலை அலெர்ட்..!

அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் மழை வெளுக்கப்போகுது... வானிலை அலெர்ட்..!

மழை

மழை

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இடி மின்னல் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை வேகத்தில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி, பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read : பாஜகவுக்கு 13 சீட்... எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை சொல்லி இபிஎஸ்ஸை சம்மதிக்க வைத்த அமித் ஷா... கோலாகல சீனிவாஸ் பகிர்ந்த தகவல்..!

top videos

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Rain updates, Weather News in Tamil