முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப் போகுது... வானிலை அலெர்ட்..!

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப் போகுது... வானிலை அலெர்ட்..!

மழை

மழை

Weather Update | தமிழ்நாட்டில் மழை முன்னறிவிப்பு தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாகக் கூறினார். காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் அதைத்தொடர்ந்து, மே 7 அல்லது 8 இல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

Also Read : அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது இதுதான்...? விரிவான தகவல்கள்..!

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், சேலம், கோவை, தஞ்சாவூர், திருச்சி உட்பட 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும் பெய்திருப்பதாக அவர் தெரிவித்தார். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்று கூறியுள்ளார். அடுத்த வரும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

top videos
    First published:

    Tags: Heavy rain, Rain Update, Weather News in Tamil