முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மக்களே அலெர்ட்... 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மக்களே அலெர்ட்... 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வெயில்

வெயில்

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் இன்று நாளையும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல் 16 ஆகிய நாட்களில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து. ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 19 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Also Read : தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: முதியோரும், இணை நோயாளிகள் கவனமாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

top videos

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Summer, Summer Heat, Weather News in Tamil