முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! வானிலை அலெர்ட்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! வானிலை அலெர்ட்

மழை

மழை

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : “சில்லுனு காத்து.. ஜம்முனு கிளைமேட்...!” கொளுத்தும் வெயிலை தணித்த கோடை மழை

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Heavy Rainfall, Rain updates, Tamil Nadu, Weather News in Tamil