முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெளுக்கப்போகுது கனமழை... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

வெளுக்கப்போகுது கனமழை... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

மழை

மழை

Tamil Nadu Weather: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நீலகிரி, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னல் மற்றும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல் உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் 27-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: 12மணி நேர வேலைக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 2- ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

top videos
    First published:

    Tags: MET