முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோடை வெயிலுக்கு ரெஸ்ட்.. 18 மாவட்டத்துக்கு கனமழை அலெர்ட் - வானிலை மையம் தகவல்

கோடை வெயிலுக்கு ரெஸ்ட்.. 18 மாவட்டத்துக்கு கனமழை அலெர்ட் - வானிலை மையம் தகவல்

மழை

மழை

Tamil Nadu Weather Update | தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டேரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி,தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களே உஷார்” மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட், குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Weather News in Tamil