முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்.. 16 இடங்களில் நேற்று சதம்..!

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்.. 16 இடங்களில் நேற்று சதம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

புதுச்சேரியில் முதன் முறையாக நேற்று 101 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 16 இடங்களில் வெயில் நேற்று சதம் அடித்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கும் முன்பாகவே, கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது.அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று 16 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவானது.அதிகபட்சமாக ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.வேலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டம் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்,

சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், சேலம் மற்றும் திருத்தணியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.

top videos

    தருமபுரியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும், கடலூர், நாகை, மற்றும் திருப்பத்தூரில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்.சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்.புதுச்சேரியில் முதன் முறையாக நேற்று 101 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.

    First published:

    Tags: Chennai, Tamil News, Weather News in Tamil