தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க; Tamil Live Breaking News : விஏஓ-க்களுக்கு கைத் துப்பாக்கி... முதல்வருக்கு கோரிக்கை..!
தென்கிழக்கு வங்கக்கடலில் மே 7 அல்லது 8 ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார். வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்றும், இதனால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, Rain updates