முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உஷார் மக்களே...! தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

உஷார் மக்களே...! தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

நாளை முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக சற்றே வெப்பம் குறைந்து, பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும் இக்காலம் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது.

இதையும் படிக்க : ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு... தீர்ப்பு குறித்து வெளியான முக்கிய அப்டேட்..!

அதேநேரத்தில் வானிலை ஆய்வு மையங்கள், அக்னி நட்சத்திரம் குறித்து பேசுவதில்லை, இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றே தெரிவித்து வருகின்றன. நாளை முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மே 7 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Heat Wave, MET warning, Summer, Weather News in Tamil