முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை வெளுக்கப் போகுது.. 4 மாவட்டங்களுக்கு வானிலை அலெர்ட்..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை வெளுக்கப் போகுது.. 4 மாவட்டங்களுக்கு வானிலை அலெர்ட்..!

மழை

மழை

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோடை மழை பெய்வது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக நேற்று பல இடங்களில் கோடை மழை பெய்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. இதன்படி, ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.இதேபோல், மதுரை திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு கோடை மழை குளிர்ச்சியான சூழலை உருவாக்கி இருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையும் படிங்க; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள்... பொதுத் தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதால் அறிவிப்பு..!

இந்த நிலையில் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rain Update, Tamil Nadu, Weather News in Tamil