முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

Corona Virus | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குபிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,866 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்தகொரோனா பாதிப்பு 36,02,215 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 366 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

தற்போது,3,195 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 55 பேருக்கும், செங்கல்பட்டில் 26 பேருக்கும் கன்னியாகுமரியில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona