முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா

கொரோனா

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகள் மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தான் கொரோனா பாதிப்பு இல்லாமல் இயல்பு நிலை நீடித்துவருகிறது.

இந்தநிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லமாக அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,199 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,96,209 பேராக அதிகரித்துள்ளது.

top videos

    இன்று மட்டும் சென்னையில் 26 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும், கோயம்புத்தூரில் 21 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 73 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    First published:

    Tags: Corona