செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் ம்ாணவர்களின் பெற்றோர்களுக்கு sms மூலமாகவும் முடிவுகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 4 கூடுதல் டிஜிபிக்களை டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
IPS TRANSFER AND POSTING
1/2 pic.twitter.com/6ckZI1n55w— TN DIPR (@TNDIPRNEWS) May 19, 2023
2,000 ரூபாய் நோட்டுகளை நாட்டின் பணப்புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதி முதல், பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துளளது.
₹2000 Denomination Banknotes – Withdrawal from Circulation; Will continue as Legal Tenderhttps://t.co/2jjqSeDkSk
— ReserveBankOfIndia (@RBI) May 19, 2023
ஒருவர் ஒருமுறை ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3.62 கோடி மதிப்பிலான ரூ.நோட்டுகள் புழக்கத்தில் உள்ள நிலையில் அக்டோபர்-1 முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
₹2000 Denomination Banknotes – Withdrawal from Circulation; Will continue as Legal Tenderhttps://t.co/2jjqSeDkSk
— ReserveBankOfIndia (@RBI) May 19, 2023
கோடை வெப்பம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள், தொழிலாளர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வோர் பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். திறந்தவேளியில் பணியாற்றுவோருக்கு வெப்ப அலைக்கு முன் பணியை முடிக்க வகை செய்க வேண்டும் என்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் குடிநீர் மற்றும் மருந்து வசதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்வது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். pic.twitter.com/hDykB4iI0d
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 19, 2023
வெப்ப அலையின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை தர போதிய மருந்து இருப்பு வைக்கவும் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளை வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு தேவை என்றும் ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதுமான ஓய்வு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு, கம்பாலா வழக்கு தீர்ப்பு மூலம் தமிழ்நாடு கன்னட கலாசாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
Happy and proud to note the Hon’ble Supreme Court’s ruling, upholding #Jallikattu that’s integral to our Tamil culture & #Kambala to Kannada culture!
Hearty congratulations to both State Governments and respect to all those who fought consistently against the ban.…— Suriya Sivakumar (@Suriya_offl) May 19, 2023
மேலும் ஜல்லிக்கட்டு, கம்பாலாவுக்கு ஆதரவாக வாதாடிய தமிழ்நாடு, கர்நாடக அரசுகளுக்கு நடிகர் சூர்யா நன்றி என்றும் ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து போராடிய அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என சூர்யா பதிவிட்டுள்ளார்.
+1 பொதுத்தேர்வில் கடந்தாண்டை விட 0.86 சதவிகிதம் பேர் கூடுதலாக தற்போது தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டு 90.07 சதவீதம் பேர் +1 தேர்வில் தேர்ச்சி அடைந்த நிலையில், தற்போது 90.93 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே போன்று கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது, கொரோனாவிற்கு பிறகு குறைந்த தேர்ச்சி சதவிகிதங்கள், தற்போது மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இயற்பியல் பாடத்தில் 95.37 சதவீதம் மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 96.74 சதவீதம் பேரும், கணித பாடத்தில் 96 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர். உயிரியல் பாடத்தின் தேர்ச்சி விகிதம் 96 .62 , தாவரவியல் பாடத்தில் 95.03, விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி விகிதம் 95.27 உள்ளது. கணினி அறிவியலில் 99.25 சதவீதம் மாணாக்கர் தேர்ச்சி அடைந்தனர். வணிகவியலில் 94.33 சதவீதம் பேரும், கணக்குப்பதிவியலில் 94.97 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
தமிழ்நாட்டில் +1 பொது தேர்வில் குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 82.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் 83.70 சதவீதத்துடன் அதற்கு முந்தைய இடத்தில் உள்ளது. இதே போன்று, குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற கடைசி ஐந்து இடங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகளில் 84.97 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் 93.20 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை எட்டிய நிலையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 97.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
+1 மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு மே 24 – 27 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 10,+1ல் தோல்வியடைந்தோர் துணைத்தேர்வு எழுத மே 23 – 27 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் +1 தேர்ச்சி அடைந்த மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 26 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 96.38% தேர்ச்சி பெற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:
1.திருப்பூர் – 96.38%
2.ஈரோடு – 96.18%
3.கோவை – 95.73%
4.நாமக்கல் – 95.60%
5.தூத்துக்குடி – 95.43%
6.விருதுநகர் – 95.19%
7.திருநெல்வேலி – 95.08%
8.அரியலூர் – 94.93 %
9.சிவகங்கை – 94.85%
10.தென்காசி – 94.14%
2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதில் தமிழில் 9 மாணவர்களும், ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 மாணவர்கள் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 7,549 மேல்நிலைப் பள்ளிகளில் 1,792 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இதில் 162 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் : 7,06,413 (90.93%)
மாணவர்கள் : 3,14,444 (86.99%)
மாணவிகள் : 3,91,968 (94.36%)
மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய மாணாக்கர்கள்
மாணவர்கள் : 4,15,389
மாணவிகள் : 3,61,461
மூன்றாம் பாலினத்தவர்கள் : 01
கடந்த மார்ச் 13ஆம் முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவ மாணவியர் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு