தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக அறிந்துகொள்ளலாம். 91.39 சதவிகிதம் பேர் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க; Tamil Nadu 10th Results: தேர்வு முடிவுகளை எளிமையாக தெரிந்துகொள்வது எப்படி?
வழக்கம் போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 90.07% ஆக இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
மொத்தமுள்ள 12,638 பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718 ஆகும். இவற்றில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.
பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்
1 அரசுப் பள்ளிகள் - 87.45%
2. அரசு உதவிப் பெறும் பள்ளிகள் - 92.24%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 97.38%
4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் - 91.58%
5. பெண்கள் பள்ளிகள் - 94.38%
6 ஆண்கள் பள்ளிகள் - 83.25%
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result, Exam results