முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் படிப்படியாக குறையும் காய்ச்சல்.. மருத்துவத் துறை தகவல்

தமிழ்நாட்டில் படிப்படியாக குறையும் காய்ச்சல்.. மருத்துவத் துறை தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu Fever | , மருத்துவப் பரிசோதனைகளில் நோய் கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மருத்துவத்துறை அறிக்கையில் தகவல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் காய்ச்சல் பரவல் படிப்படியாக குறைந்து வருவது மருத்துவத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து தினந்தோறும்  வைரஸ் காய்ச்சலுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடமாடும் வாகனங்கள் மூலமும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தொற்றுநோய் தடுப்புத் துறையின் மூலமாக, கடந்த 5 நாட்களில் நடத்தப்பட்ட 16,932 முகாம்களில் 7, 77, 145 பேர் பயன்பெற்றுள்ளனர். தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை மூலமாக காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 10-ம் தேதி 4,446 முகாம்கள் மூலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2,663 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

Also Read : ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காத 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி அவசர ஆலோசனை

11 ஆம் தேதி 2,844 முகாம்கள் மூலமாக 819 காய்ச்சல் நோயாளிகளுக்கும், 12 ஆம் தேதி 298 முகாம்கள் மூலமாக 92 காய்ச்சல் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

13 ஆம் தேதி 3,184 முகாம்கள் மூலமாக 902 நோயாளிகளுக்கும், 14 ஆம் தேதி 3,168 முகாம்கள் மூலமாக 879 நோயாளிகளுக்கும், 15 ஆம் தேதி  2 ,992 முகாம்கள் மூலமாக 647 காய்ச்சல் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை கூறியுள்ளது. இதன்படி, மருத்துவப் பரிசோதனைகளில் நோய் கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது.

First published:

Tags: Fever, Tamilnadu