முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு..? - அமைச்சர் கொடுத்த பதில்

தமிழ்நாட்டில் முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு..? - அமைச்சர் கொடுத்த பதில்

மாதிரி படம்

மாதிரி படம்

புதுச்சேரியில் காய்ச்சல் பரவல் காரணமாக, 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று முதல்,11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விடுமுறை அளிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என விளக்கமளித்தார்.

இதையும் படிக்க :  தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு : பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதனால், 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்களுக்கு, ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்த நிலையில், ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 17ஆம் தேதியே முழு ஆண்டுத் தேர்வுகளைத் தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, புதுச்சேரியில் காய்ச்சல் பரவல் காரணமாக, 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று முதல்,11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு காய்ச்சல் பரவுவதாக முதலமைச்சரிடம், மருத்துவத்துறை அறிக்கை அளித்ததன் அடிப்படையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு, வியாழக்கிழமையில் இருந்து வரும் 26-ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என அமைச்சர் நமச்சிவாயம் குறிப்பிட்டார்.

First published:

Tags: Ma subramanian, School student