2022-23ம் கல்வியாண்டிற்கான, 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வருகிற 19-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
2022-23 ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6 தேதி துவங்கி ஏப்ரல் 20 ந் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் பேரும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேரும் எழுதியிருந்தனர். இதில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படப்படவுள்ளது.
தேர்வர்கள் www.tnresults.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: உயர் கல்வி ஏன் இவ்வளவு முக்கியம்..? மாணவிகளுக்கு அறிவுரை கூறிய நெல்லை ஆசிரியர்கள்..!
இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் உடனடியாக சிறப்புத் துணை தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result