முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்..!

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்..!

விளையாட்டு

விளையாட்டு

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  “மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மாணவிகளுக்கான விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

இது மட்டுமின்றி மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திலும், திருச்சி, (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலியிலும், மாணவ, மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டுமைய விடுதி வேலூர் சத்தூவச்சாரியிலும் செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கையும், முதன்மைநிலை விளையாட்டு மையங்களில் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது.

இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் மே 24-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கங்களில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நிச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், உள்ளிட்ட போட்டிகளும் மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும்.

இதையும் படிக்க : மெட்ரோ ரயில்களில் பயணிக்க இனி வாட்ஸ் ஆப்லயே டிக்கெட் வாங்கலாம் - சென்னையில் நாளை முதல் புதிய வசதி அறிமுகம்!

சென்னையில் இருப்பவர்களுக்கான தேர்வு போட்டிகள் சென்னை ஜவ்ஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் காலை 7 மணிக்கு நடைபெறும் இதில், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை https://sdat.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Sports