முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - இன்றைய பாதிப்பு நிலவரம்?

தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - இன்றைய பாதிப்பு நிலவரம்?

கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 113 பேர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 பேர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 19 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 369 பேருக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 4,573 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் புதியதாக 369 பேருக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 113 பேர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 பேர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 19 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 172 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். இன்று தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை எதுவும் இல்லை. இதுவரை கொரோனாவுக்கு 38,050 பேர் உயிரிழந்துள்ளனர்.

top videos

    மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: CoronaVirus, Covid-19