முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது- ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதல்வர் மகிழ்ச்சி

பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது- ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதல்வர் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு போட்டி

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.

  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பான வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் அடையாளம் என்று தமிழக அரசின் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை அடுத்து, அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என்று தமிழ்நாடு மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவரது ட்விட்டர் பதவில், ‘தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்" என்று தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ’அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளார். இந்த வழக்கில் அதிமுக தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு எடுத்த அனைத்து சட்டப் போராட்டங்களுக்கும் துணை நின்ற தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், இது ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க, வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க தொடக்கம் முதல் இன்று வரை பிரதமர் மோடி குரல் கொடுத்தார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

top videos

    ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என அயலகத் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தெரிவித்தார்.

    First published:

    Tags: Jallikattu, Jallikattu protest, Supreme court