முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மரக்காணம் கள்ளச் சாராய உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

மரக்காணம் கள்ளச் சாராய உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

மரக்காணம் கள்ளச்சாராயம் துயர நிகழ்வு

மரக்காணம் கள்ளச்சாராயம் துயர நிகழ்வு

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த மரணங்களுக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu |

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர்  உயிரிழந்தனர்.  இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த ராமதாஸ் ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டியது தமிழக அரசின் சட்டப்பூர்வ கடமையாகும். அதற்காகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு நடைமுறை என்ற தனிப்பிரிவு காவல்துறையில் செயல்பட்டு வருகிறது. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரும், மதுவிலக்கு நடைமுறைப்பிரிவினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இது குறித்து விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில், " திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாசாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ளதாகவும், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த மரணங்களுக்கு காரணம் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கும் சிகிச்சைபெற்று வருபவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கவேண்டும். கள்ளச்சாராயம் விற்றவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விசிக கட்சி விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்ககள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளச்சாராயம் தலைதூக்கி இருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாக கூறி அண்ணாமலையும் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Tasmac, Villupuram