முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி... தமிழ்நாடு காவல்துறை அனுமதி...!

45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி... தமிழ்நாடு காவல்துறை அனுமதி...!

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்ட 45 இடங்களிலும், ஒரே நாளில் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி நிபந்தனைகளுடன் அனுமதி வழகிய நிலையில், மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது.

ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், அனுமதி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையும் வாசிக்கதமிழ் மொழி மீது இந்தியை திணிக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி

இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்ட 45 இடங்களிலும், ஒரே நாளில் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது. ஏப்ரல் 16-ம் தேதி ஊர்வலம் நடத்தவும், அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்தவும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

top videos
    First published:

    Tags: RSS, Tamil Nadu