முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இனி இதையெல்லாம் செய்தால் கைது: அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

இனி இதையெல்லாம் செய்தால் கைது: அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் விளையாட்டு செயலியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப விவரங்கள், செயற்கை நுண்ணறிவு தகவல்களையும் அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்தது.   ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத ஓய்வுபெற்ற அதிகாரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்களை இந்த அமைப்பு கண்காணிக்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், ஒரு மாதத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனவும், இதற்காக ஒரு லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டின் பாதுகாப்பு, சர்வர் இருக்கும் இடம், தகவல் மையம் தொடர்பான விவரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டு செயலியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப விவரங்கள், செயற்கை நுண்ணறிவு தகவல்களையும் அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவை தவிர பயனாளர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளின் விவரங்கள், நேரக் கட்டுப்பாடு விவரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் முதல் முறையாக கிடைத்த தேவார பதிகம் இடம்பெற்றுள்ள செப்பேடுகள்..!

ஆன்லைன் விளையாட்டிற்கான கட்டணம், பரிசுத்தொகை, புள்ளிபட்டியல் விவரங்கள் மற்றும் சலுகைகளை அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் விதிமுறைகளை மீறினால், அந்நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

top videos

    குறிப்பாக திறனை பயன்படுத்தாமல், வாய்ப்பை மட்டுமே பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் உருவாக்கப்பட்ட ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட செயலிகள் தடை செய்யப்படும். ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் வருடாந்திர அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை அமைப்புக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    First published:

    Tags: Online rummy