முகப்பு /செய்தி /தமிழ்நாடு / யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்.. முழு விவரம்..!

யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்.. முழு விவரம்..!

யுபிஎஸ்சி தேர்வு

யுபிஎஸ்சி தேர்வு

UPSC Exam Result : இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் வாரிசுகள் சாதனை படைத்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அதிகாரிகளின் பிள்ளைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி டி.ஜே.சத்ரியா கவின் இந்திய அளவில் 169வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசுச் செயலாளர் ஜெகந்நாதனின் மகள் ஆவார்.

மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மைச் செயலாளரும், கமிஷனருமான அதுல் ஆனந்தின் மகள் ஈசானி 291வது இடத்தை பிடித்துள்ளார். 361வது இடத்தை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் பெற்றுள்ளார்.

Also Read : மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் : தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 5 தேதி நடைபெற்று முடிவுகள் ஜூன் 22 வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெற்றது. அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 6 ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது.

top videos

    தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுச் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளனர்.

    First published:

    Tags: Tamil Nadu, UPSC