உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...பூவிருந்தவல்லி அருகே உள்ள நசரத்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மூவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். கொள்ளை, திருட்டு வழக்கில் தொடர்புடைய மூவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்து இருந்த நிலையில் மூவரையும் போலிசார் ஆஜர்ப்படுத்தி இருந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகமால். இருந்ததை நீதிபதி கண்டித்ததை அடுத்து பயந்து போன குற்றவாளி ராஜா தப்பி ஓட்டம். தப்பி ஓடிய ராஜாவை கைது செய்யக்கோரி பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 5 ஆண்டுகள் ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கு மே 15 முதல் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
ஆளுநர் சொல்கிறார் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று. ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்கிறார் தமிழகம் அமைதி பூங்கா என்று. நாங்கள் நீதிபதி சொன்னதை ஏற்கவேண்டுமா?ஆளுநர் சொல்வதை ஏற்க வேண்டுமா?
– அமைச்சர் துரைமுருகன்
டிடிவி தினகரனை அடையாறிலுள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் உடனிருந்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது, இலட்சியத்தை அடையை சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில்
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான இலட்சினை, சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், “உதயநிதி அமைச்சரான பிறகு மாபெரும் எழுச்சியை விளையாட்டுத் துறை பெற்றுள்ளது. நாள்தோறும் ஏதேனும் ஒரு பணி விளையாட்டு துறையில் நடைபெற்று வருகிறது. அவருக்கும் அவர் துறையை சார்ந்த இருப்பவர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், படகு உரிமையாளர் நாசரை கோழிக்கோடு பகுதியில இருந்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில போலீசார் கைது.
டிடிவி தினகரனை சென்னை அடையாறிலுள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரவு 7 மணி அளவில் சந்திக்கவுள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனை சந்திக்கவுள்ளனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேர்தலில் 5 கோடியே 21 லட்சத்து 73ஆயிரத்து 579 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 58 ஆயிரத்து 282 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேர்தலில் 5 கோடியே 21 லட்சத்து 73ஆயிரத்து 579 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 58 ஆயிரத்து 282 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
தருமபுரி மாவட்டம் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
நீட் தேர்வு எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டுத் தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல் – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
கேரளா ஸ்டோரி, பர்கானா, புர்கா உள்ளிட்ட திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பின் சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை, ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த பல்கலைக்கழக உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதகை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 34 மாணவர்களுக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு. மார்ச் மாதம் 27ம் தேதி உதகை அருகே உள்ள சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4 ல் கணிதத் தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு விடைத்தால் சென்னை தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவில்லை.
சிவகங்கை மாவட்டத்திலேயே மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 592 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்து மாணவி ஜனனி சாதனை.
அப்பா இல்லமால் பாட்டியின் உதவியுடன் படித்து வெற்றி பெற்ற மாணவி CA படிக்க உதவ வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மத்திய சிறைச் சாலையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 6 ஆண் கைதிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , “ நதிகள் மீதான ஈடுபாட்டின் காரணமாக தான் 89 ல் இருந்து நீர்வளத்துறையை கையில் வைத்துகொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த நதியில் ஒன்று தாமிரபரணி நதி. தாமிரபரணி நதியை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க திட்டம் தயார் செய்யப்பட உள்ளது.” என்றார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு குறித்து அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் கோரி வரும் 9ம் தேதி காலை 11 மணி முதல் 13ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ் , ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆகிய பாடங்களில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார்