தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 13 இடங்களில் நேற்று 100 ஃபாரன்ஹீட்டைக் கடந்து வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதால், மக்கள் அவதி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக சில இடங்களில் மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.
இந்நிலையில், மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டாத நிலையில், நேற்று 13 இடங்களில் சதமடித்தது.
இந்த ஆண்டில் முதல் முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 புள்ளி இரண்டு ஆறு ஃபாரன்ஹீட்டும், மீனம்பாக்கத்தில் 105 புள்ளி பூஜ்யம் எட்டு ஃபாரன்ஹீட்டும் பதிவானது. கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மற்றும் நாகையிலும் 100 ஃபாரன்ஹீட்டை கடந்தது. பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருத்தணி, வேலூர் ஆகிய பகுதிகளிலும் வெப்பம் 100 ஃபாரன்ஹீட்டை கடந்தது.
இதையும் படிங்க; IPL 2023 : 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி!
தமிழ்நாட்டில் 18ஆம் தேதி வரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு 104 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் ஜூஸ் மற்றும் பழக்கடைகளை நோக்கி படையெடுத்து வருவதால், குளிர்பானம் மற்றும் பழக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heat Wave, Weather News in Tamil