முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் வெயில்... 15 இடங்களில் சதமடித்தது... மக்கள் கடும் அவதி...!

தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் வெயில்... 15 இடங்களில் சதமடித்தது... மக்கள் கடும் அவதி...!

மாதிரி படம்

மாதிரி படம்

Tamil Nadu Heat wave | சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது.

அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கடப்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரஹீட் வெயிலும் கொளுத்தியது.சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும்,

மீனம்பாக்கம் மற்றும் எண்ணூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. கரூர் - பரமத்தி மற்றும் புதுச்சேரியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை, கடலூர் மாவட்டங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகவும்,திருச்சியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல, பாளையங்கோட்டை, தஞ்சை, விருத்தாசலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், ஈரோடு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் ஆகிய பகுதிகளில் 101 டிகிரி வெயில் வாட்டியது. கடும் வெயில் நிலவுவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க; வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வழி...? மருத்துவர் சொல்லும் டிப்ஸ் இதோ...!

இதனிடையே தமிழ்நாட்டில் ஓரீரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Heat Wave