முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொடூரமான உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது - தி கேரளா ஸ்டோரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

கொடூரமான உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது - தி கேரளா ஸ்டோரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடூரமான உண்மையை, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்தது. பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட சூழலில், மேற்கு வங்கம், தமிழகத்தில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததாக கூறி, திரையரங்க உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்துவிட்டனர்.

top videos

    இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ தியேட்டரில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தனது மனைவியுடன் கண்டுகளித்தார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர் ரவி, கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என்று படக் குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: RN Ravi