வானொலி வாயிலாகப் பிரதமர் மோடி உரையாற்றும் மனதின் குரலின் 100வது நிகழ்ச்சியை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பல்வேறு துறைகள் சார்ந்த 100 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் “மான்கிபாத்” என்கின்ற மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதுவரை 99 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நிலையில், வரும் 30 ஆம் தேதி 100வது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். நாடு முழுவதும் மனதின் குரல் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியினால் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2019 இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு துறை சார்ந்த எளிமையான மக்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிவருகிறார். அதிக முறை தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பிரதமர் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
தற்போது 100வது அத்தியாகத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசவுள்ள நிலையில், அதனைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இணைந்து பல்வேறு துறைகள் சார்ந்த 100 முக்கிய விருந்தினர்கள் பிரதமரின் மனதின் குரல் உரையாடலை நேரலையில் கேட்கவுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mann ki baat, PM Modi, RN Ravi, Tamil Nadu Governor