முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12 மணி நேர வேலை மசோதா : 24-ம் தேதி தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை

12 மணி நேர வேலை மசோதா : 24-ம் தேதி தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய மசோதா குறித்து முக்கிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், தொழிற்சங்கங்களுடன் நாளை மறுநாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாளில் 12 மணி நேரம் வரை தொழிலாளர்கள் பணியாற்றலாம் என தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சிகளே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என அதிமுக, விசிக, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய மசோதா குறித்து முக்கிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரும், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Labour Law, Tamilnadu government