2023ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் முதல்கட்ட அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
இதில், சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். அதில், சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு ஏதேனும் விண்ணப்பம் கிடைத்துள்ளதா என்று குறிப்பிட்டு, மேலும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து எதிர்ப்பு ஏதேனும் எழுந்தததா என்றும் அன்புமணி வினவியிருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று கூறியுள்ளார். அதே சமயம் இத்திட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதும், அத்திட்டத்திற்கு மக்களும் அன்றைய எதிர்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani, Chennai salem, Chennai salem green corridor, Nitin Gadkari