ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தால் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வெளிநாட்டு நிதியில் நடைபெற்றது என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநரின் பேச்சுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்தனர். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் தரப்பிலிருந்து அவருடைய பேச்சு குறித்து முழு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், ‘சட்டப்பேரவை விதி 92 - 7-ன் கீழ் அடங்கியுள்ள conduct of any governor, rule the governor name for the purpose of influencing a debate உள்ளிட்ட பதங்களை நிறுத்திவைத்து தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.
அந்தத் தீர்மானத்தின் மீது எண்ணிக் கணிக்கும் முறையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனால், பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. அதனால், பா.ஜ.க உறுப்பினர்களால் வெளிநடப்பு செய்ய முடியவில்லை. பா.ஜ.க உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அ.தி.மு.க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Governor