முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12 மணி நேர வேலைக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு- நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை

12 மணி நேர வேலைக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு- நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை

தமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டமன்றம்

12 மணி வேலையை வலியுறுத்தும் மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு நாளை மறுநாள் ஆலோசனை நடத்தவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா-2023 நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலை, வாரத்துக்கு 3 நாட்கள் விடுப்பு போன்ற அம்சங்கள் வலியுத்தப்பட்டன. இந்த மசோதாவுக்கு தி.மு.க கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 மணி நேர வேலையை வலியுறுத்தும் மசோதாவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. தி.மு.க அரசின் முடிவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், சீமானும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த முடிவை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவோம் என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

இந்தநிலையில், ‘12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தவுள்ளது. தொழிற்சங்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் 3 அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Tamil Nadu