முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிறை தெரிந்தது: நாளை ரமலான் கொண்டாட்டம் - தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

பிறை தெரிந்தது: நாளை ரமலான் கொண்டாட்டம் - தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் நோம்பு தொடக்கம்

ரமலான் நோம்பு தொடக்கம்

தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் மார்ச் 24 ம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான், புனித ரமலான் மாதத்தில்தான் இறைவனால் நபிகள் பெருமகனாருக்கு அருளப்பட்டது. இந்த மாதத்தில் அமைதி, கருணை, இறையருளை வேண்டி, பிரார்த்தனை நடத்த வேண்டும். இஸ்லாமியர்களின் முக்கியமான ஐந்து கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு சொல்லப்படுகிறது.

பிறை தெரிந்தது முதல் தினமும் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமல் கடுமையான நோன்பு விதிகள் கடைபிடிக்கப்படுகிறது. மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே இஃப்தார் விருந்துடன் நோன்பு திறக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 29 முதல் 30 நாட்கள் கொண்டதாக ரமலான் மாதம் கணக்கிடப்படுகிறது.

பிறை தெரிவதைப் பொறுத்தே ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் பிறை தெரிவதைப் பொறுத்து ரமலான் தேதியை அறிவிப்பார்.

ரம்ஜான் பண்டிகைக்கு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..! எந்த ஊர் சந்தை தெரியுமா?

ரமலான் மாதத்தின் ஷவல் மாதத்துக்கான பிறை தென்பட்டதால் தமிழகம் முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முகமது சலாவுதீன் ஆயூப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல, புதுச்சேரியிலும் பிறை தென்பட்டதால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

top videos
    First published: