முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று மட்டும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு- 2 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு- 2 பேர் உயிரிழப்பு

கொரோனா தடுப்பு ஒத்திகை

கொரோனா தடுப்பு ஒத்திகை

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 500-யைக் கடந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்துவருகிறது. எனவே, மருத்துவமனை உள்ளிட்ட பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு கூடுதலாக உள்ளது’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,580 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக மொத்த பாதிப்பு 36,04,865 ஆக அதிகரித்துள்ளது.

top videos

    இன்று மட்டும் 492 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. தற்போது, கொரோனா பாதித்து 3,660 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 108 பேருக்கும், கோயம்புத்தூரில் 54 பேருக்கும், கன்னியாகுமரியில் 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Corona