முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தொழில் முதலீடுகளை ஈர்க்க... ஜப்பான் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தொழில் முதலீடுகளை ஈர்க்க... ஜப்பான் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம்

முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம்

பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு வரவேற்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு வருகிற 23ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவயல் கிராமத்தில் 52 ஏக்கரில் அமைய உள்ள மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஏர் கன்டிஷனர் மற்றும் கம்ப்ரஸர் தொழிற்சாலைக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

1,891 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு வரவேற்கும் என்றார்.

இதையும் வாசிக்கமுதலமைச்சர் ஸ்டாலினுடன் 12ஆம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி சந்திப்பு

ஜப்பான் இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர்.

top videos

    இந்த உறவை மேலும் வலுப்படுத்திடும் வகையில்தான், இந்த மாத இறுதியில், முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி, நான் ஜப்பான் செல்ல இருக்கிறேன். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு நான் அழைப்பு விடுக்க இருக்கிறேன். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

    First published:

    Tags: CM MK Stalin, Investment, MK Stalin