தமிழ் நாடு அரசால் வழங்கப்படவுள்ள ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.
மகளிர் உரிமைத்தொகை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ஒரு நீண்ட விளக்கத்தை தர விரும்புகிறேன், தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதுதேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் வலிக்காத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறதுசமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார்.
நீதிக்கட்சி முதலே பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 7000 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் கிடைக்காது என எல்லோரும் மனக்கணக்கு போட்டுக் கொண்டு வருகிறார்கள் என கூறினார்.
மேலும், உரிமை தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது என்றும், இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமை திட்டம் என்றும், பெண்களின் வங்கி கணக்கிற்கே மகளிர் உரிமைதொகை செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மீனவ பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள், ஒரே நாளில் பல்வேறு இல்லங்களில் பணிபுரியும் பெண்கள், கட்டிடப் பணியாளர்கள் , சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள் என பலர் பயனடைவர் எனவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, MK Stalin, TN Assembly, TN Budget 2023