முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழ்நாடு

தமிழ்நாடு

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

top videos

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளிநாடு பயணம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், புதிய தொழில் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: MK Stalin, Tamil News, Tamilnadu, TN Assembly