முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12மணி நேர வேலைக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 2- ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்...

12மணி நேர வேலைக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 2- ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்...

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu Cabinet Meeting | 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

12 மணி நேர வேலை தொடர்பான சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மே 2- ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் சட்டப்பேரவையை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஜோடிக்கப்பட்ட ஒன்று... ஆடியோ சர்ச்சை குறித்து பி.டி.ஆர் விளக்கம்

இந்த சூழலில் அமைச்சரவை கூட்டம் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

top videos

    2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.12 மணி நேர வேலை தொடர்பான சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

    First published:

    Tags: Tamilnadu, TN Cabinet