முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல... ரூ.29,000 வழங்கவேண்டும்... " - அண்ணாமலை வலியுறுத்தல்!

"குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல... ரூ.29,000 வழங்கவேண்டும்... " - அண்ணாமலை வலியுறுத்தல்!

அண்ணாமலை - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அண்ணாமலை - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

’மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' திட்டத்தின் முதல் தவணையில், 28 மாதத்தின் நிலுவைத்தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், திமுகவின் வாக்குறுதியான, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் உள்ள பெண்கள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த திட்டத்தின் முதல் தவணையில், 28 மாதத்தின் நிலுவைத்தொகையுடன் சேர்த்து, 29,000 ரூபாயாக வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29,000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Annamalai, Minister Palanivel Thiagarajan, TN Assembly, TN Budget 2023