முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''பிடிஆர் ஆடியோவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'': ஆளுநரிடம் பாஜக மனு

''பிடிஆர் ஆடியோவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'': ஆளுநரிடம் பாஜக மனு

தமிழ்நாடு ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து பேசியது தொடர்பாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ போலியானது என நிதியமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். அவர் தனது விளக்கத்தில்,  மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட ஒலி நாடா என்றும், இதுபோன்ற அப்பட்டமான அபாண்டமான  செயல்களுக்கு விளம்பரம் தராமல் கடந்து செல்வதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த ஆடியோ தொடர்பாக நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழ்நாடு பாஜக, அதிமுக முதலான  கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழுவினர் சந்தித்து,  ஆடியோ தொடர்பாக புகார் அளித்துள்ளனர். பாஜக நிர்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு. நாகராஜன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் வாசிக்க: அது என் குரலே இல்லை..இட்டுக்கட்டப்பட்ட ஆடியோ - பிடிஆர் ...

முன்னதாக, இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்,

ரூ. 30 ஆயிரம் கோடி தொடர்பான ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க நாங்கள் வலியுறுத்துவோம்" என்று தெரிவித்திருந்தார்.

First published: