முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பென்னி குயிக் சிலை - சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்

பென்னி குயிக் சிலை - சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

லண்டனில் பென்னி குயிக் சிலை கருப்பு துணியால் மூடப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது

  • Last Updated :
  • Chennai, India

லண்டனில் நிறுவப்பட்ட பென்னி குயிக் சிலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்.

லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட்ட பென்னிகுயிக் சிலை கருப்பு துணியால் மூடி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானதை கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “முல்லைப் பெரியாறு அணையை சொந்த செலவில் கர்னல் ஜான் பென்னிக் குயிக் கட்டி முடித்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது, லண்டனில் திமுக அரசு மார்பளவு சிலையை திறந்து வைத்தார்கள். அவரின் சிலை கருப்பு துணியால் மூடப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. அவமானப்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

உண்மை நிலை என்ன என்றும் மூடிய சிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிலையைத் திறந்து பராமரிக்க வேண்டும். சிலை அங்கேயே இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பேசினார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன்;அரசு விவரங்களை அறிந்து, நடவடிக்கை எடுத்து சபைக்கு அறிவிக்க வேண்டியதை முறையாக அறிவிக்கும் என தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: ADMK, London, Tamil News