உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி – கர்நாடக மாநில எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவு.
வருகின்ற 8ம் தேதி மாலை 6 மணி முதல் 10ம் தேதி நள்ளிரவு வரை அனைத்து அரசு, தனியார் மதுபானங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவு.
தமிழ்நாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் 469 பேர் குணமடைந்தனர். கொரோனா தொற்றுக்கு 2,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் – தமிழ்நாடு சுகாதாரத் துறை
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் விழாவினை முன்னிட்டு மே 4ம் தேதி மதுரை மாநகராட்சியில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மூடப்படும் – மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், “அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுவெளியில் பேசும்போது மூத்த அமைச்சர்கள் கவனத்துடன் பேச வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு.
சென்னை தலைமைச் செயலகத்தில் என்எல்சி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கலந்துகொண்ட பிறகு பேசிய அன்புமணி, “மூன்று தலைமுறையாக நெய்வேலி பகுதியில் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8அடியில் இருந்து 1000அடிக்கு நீர் மட்டம் குறைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு என்எல்சி தேவையில்லை என விரிவான கடிதம் கொடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் விருத்தாச்சலம் தனியார் பள்ளிக்கு சீல் வைப்பு. தாளாளர் பக்கிரிசாமி போக்சோ சட்டத்தில் கைதான நிலையில் நடவடிக்கை.
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்
தமிழ்நாட்டில், பணி அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், அது தொடர்பாக புகாரளித்தால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்ய விஏஓக்களுக்கு கைத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் – முதலமைச்சருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை
அப்பாவி இளைஞர் சமூதாயத்தினருக்கு மரண அடியை கொடுக்கும் கருவியாக போதை பொருள் கடத்தல் உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை சிறப்பு நீதிமன்றம், கஞ்சா கடத்திய மகாராஷ்டிராவை சேர்ந்த மூவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜிப்மரில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச சிகிச்சை தொடரும். தவறாக கூற வேண்டாம். இது அரசியலாக்க படுகிறது – துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி (கேழ்வரகு) வழங்கும் திட்டம் நாளை தொடக்கம். உதகையில் உள்ள மாவட்ட வாணிப கழக கிடங்கில் ஆய்வு செய்த தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகினார். அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அறிவிப்பு.
பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல். அமைச்சர்களுடன் நடைப்பெற்ற ஆலோசனையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளது எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வால் ஏழையை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை உணர்த்தும் வகையில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 100 க்கும் மேற்பட்டோர் சவபாடைகட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து ராஜா திரையரங்கம் அருகே உள்ள கர்மவீரர் காமராஜரிடம் ஒப்பாரி வைத்து முறையீடு..
உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், தூக்கு தண்டனைக்கு மாற்று வழியை கண்டறிய நிபுனர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. பட்ஜெட் தொடர் நிறைவு பெற்றதையடுத்து, திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை என தகவல்.