Tamil News Live: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க நோட்டீஸ்

இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்

0மேலும் படிக்க ...
16 Apr 2023 17:33 (IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 Apr 2023 17:08 (IST)

அதிமுக செயற்குழுக் கூட்டம் நிறைவு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

16 Apr 2023 16:27 (IST)

தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடக்கம்

 

உச்ச நீதிமன்ற அனுமதியின்படி, தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது. சென்னை கொரட்டூரில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் கலந்து கொண்டுள்ளார். பெரம்பூர், வடபழனி, திருவெற்றியூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் 2,000 கலந்துகொண்டுள்ளனர். 700 போலீசார் பாதுப்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றுவருகிறது.

16 Apr 2023 16:20 (IST)

சென்னை, ஹைதராபாத் அணி போட்டி- டிக்கெட் விற்பனை ஏப்ரல் 18-ம் தேதி தொடக்கம்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் ஏப்ரல் 21-ம் தேதி மோதவுள்ளது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கவுள்ளது.

16 Apr 2023 15:01 (IST)

சுட்டெரிக்கும் வெப்பம் : பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் கடும் வெப்பம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

16 Apr 2023 14:27 (IST)

பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் : ராணிப்பேட்டை ஆட்சியர் அதிரடி உத்தரவு

கொரோனா பரவல் அதிகரிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். உடல் சோர்வு, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொற்று பாதித்தவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார்.

16 Apr 2023 14:09 (IST)

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது

16 Apr 2023 11:57 (IST)

பாஜகவிலிருந்து விலகிய கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர்!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை. இதனால், கடந்த சில வாரங்களாக தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என கூறியிருந்தார். மேலும் இன்று சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

16 Apr 2023 11:41 (IST)

சூடானில் நடந்த மோதலில் இந்தியர் மரணம்

சூடானில் நடந்த ஆயுதப்படைகள் மோதலில் இந்தியாவைச்சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். உயிரிழந்த அகஸ்டின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாக இந்திய தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

16 Apr 2023 11:17 (IST)

சிபிஐ அலுவலகத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்

மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் வழங்கிய நிலையில், இன்று சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

16 Apr 2023 10:41 (IST)

தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் தீ பரவட்டும் என ஹேஷ் டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

16 Apr 2023 10:38 (IST)

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

சென்னை அடுத்த மிகப்பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட 13 கிராமங்கள் ஒன்றிணைந்து 4750 ஏக்கர் நிலப்பரப்பில் அமைதியாக அரசு தெரிவித்த நிலையில் 264 வது நாளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இன்று ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு 100க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்துக் கொண்டு கையில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

16 Apr 2023 09:12 (IST)

சூர்யாவின்42 வது படத்திற்கு கங்குவா என தலைப்பு - படக்குழு அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இது சூர்யாவில் 42 வது படம் என்பதால் சூர்யா 42 என்ற தற்காலிக தலைப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்திருக்கின்றனர்.

16 Apr 2023 09:04 (IST)

பாஜகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கிளிக்

16 Apr 2023 09:01 (IST)

டி.டி.வி தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி

“டிடிவி தினகரனின் சொத்துகளை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
முழு செய்திக்கு இங்கே கிளிக் செய்க

16 Apr 2023 08:59 (IST)

இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான  ராசி பலன் இதோ… கிளிக்

16 Apr 2023 08:53 (IST)

உத்தர பிரதேசத்தில் 144 தடை உத்தரவு

உத்தர பிரதேசத்தில், மாபியா கும்பல் தலைவனும், பிரபல அரசியல்வாதியுமான அத்திக் அகமது, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

16 Apr 2023 08:50 (IST)

அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு

மெட்ரோ ரயில் நிறுவன டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் அது முழுக்க முழுக்க தவறான தகவல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு விவரத்துக்கு கிளிக்

16 Apr 2023 08:36 (IST)

பிரபல ரவுடி அத்திக் அகமதுவை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த அத்திக் அகமது, 5 முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்துள்ளார். பிரபல ரவுடியான இவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில், அத்திக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர், பிரயாக ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டே இருவரும் சென்றபோது, கூட்டத்தில் நின்றிருந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அத்திக் அகமதுவும், அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  அத்திக் அகமதுவையும் அவரது சகோதரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

16 Apr 2023 08:29 (IST)

சிபிஐ முன்பு இன்று ஆஜராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் இன்று சிபிஐ முன்பு ஆஜராக உள்ளார்.

കൂടുതൽ വായിക്കുക