இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்
மேலும் படிக்க ...உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரை சிறையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக போலீசார் அழைத்துச் சென்ற போது, செய்தியாளர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் ரவுடி அத்திக் அகமது தலையில் சுட்டு கொன்றார்..
#WATCH | Uttar Pradesh: Moment when Mafia-turned-politician Atiq Ahmed and his brother Ashraf Ahmed were shot dead by assailants while interacting with media.
(Warning: Disturbing Visuals) pic.twitter.com/PBVaWji04Q
— ANI (@ANI) April 15, 2023
கிருஷ்ணகிரியில் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொன்ற தந்தையைக் காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
அண்ணாமலை தெரிவித்த லஞ்சப் புகாருக்கு சென்னை மெட்ரோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை”புத்தக வெளியீடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார்.
சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க உடனடியாகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கோரிக்கைவைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் தீர்மானத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுதப் படைக் காவலர் தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குட்கா வழக்கில் தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனை சி.பி.ஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வரும் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை டிப்ளமோ மற்றும் டிப்பளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு வரும் 19ஆம் தேதி www.unom.ac.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் எழுதியிருந்த கடிதத்தின் விளைவாக, மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) காவலர் தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த முடிவை மனதார வரவேற்கும் அதேவேளையில், மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற நமது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.
டிக்டாக் மூலம் பிரபலமான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜிபி முத்து. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மத்திய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாநில மொழிகளில் மத்திய ஆயுத காவல் படை தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில் மத்திய ஆயுத காவல் படை தேர்வை தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
234 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட திமுக பார்வையாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டனர்.
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“திருநங்கைகள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கலைஞர்!
அதைத்தான் திருநங்கைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்! என பதிவிட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமிதோ கிஷிடா பேசிக்கொண்டிருந்த இடத்தில் திடீரென குண்டு வீசப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு வீரர்கள் பிரதமரை பத்திரமாக வெளியேற்றினர். இதனால் பிரதமர் ஃபுமிதோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
#UPDATE Local Japanese media is reporting that PM Kishida is safe after a loud bang with the suspect in custody. #Japan #6NewsAU pic.twitter.com/HmH5qg0zDl
— Roman Mackinnon (@RomanMackinnon6) April 15, 2023
இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் பிரதமர் கிஷிடாவை நோக்கி வெடிகுண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரான கே.பி.சங்கர், மீனவர் அணி துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.